சென்னை நெசப்பாக்கம் விவேகானந்தர் நகர், ஹரி சங்கர் தெருவில் பள்ளி அருகே உள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை இருப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.