சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-23 16:45 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தக்காளி மார்க்கெட் எதிரே உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சாக்கடை கால்வாயில் நிறைந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், பாலக்கோடு.

மேலும் செய்திகள்