தஞ்சையை அடுத்த விளார் பகுதி காயிதே மில்லத்நகரில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை கழிவுநீர், சாக்கடையில் புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சாலையோரத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரையும் சாக்கடை போல் மாற்றிவிடுகின்றன. பன்றிகள் சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?