தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்க மாரண்டஅள்ளி ஊரின் மைய பகுதியில் கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்புகள் நீண்ட நாட்களாக உடைந்த நிலையில் உள்ளது. இது பற்றி பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குறுகிய சாலை வழியாக மோட்டார் சைக்கிள், சரக்கு வாகனங்கள் செல்லும் சாலை என்பதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. அதனால் கழிவுநீர் கால்வாய் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அந்த பகுதியில் உள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-கோவிந்தசாமி, சிக்க மாரண்டஅள்ளி.