நோய் பரவும் அபாயம்

Update: 2023-06-25 17:09 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சி ஏர்கோல்பட்டியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப் பகுதியில் சாக்கடைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- ஜெயக்குமார், ஏரியூர்.

மேலும் செய்திகள்