ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மேற்கு போலீஸ் நிலையம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் அதனருகில் கழிவுநீரும் வழிந்ேதாடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. யாரேனும் குழிக்குள் விழும் முன்பு புதிய மூடி அமைக்கவும், கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.