தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாதேஅள்ளி துணை சுகாதார நிலையம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முனியப்பன், மாதேஅள்ளி, தர்மபுரி.