ஈரோடு சூரம்பட்டிவலசு சாஸ்திரி நகர் பகுதியில் கழிவு நீர் செல்வதற்காக பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 6 மாதமாக அதில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?