காஞ்சிபுரம், காமராஜர் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல மாதங்களாக திறந்த நிலையில் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வந்து இப்பகுதியில் செல்கின்றனர். இதுகுறித்து பலமுறை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் கால்வாயினை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் ..