கழிவுநீர் கால்வாய் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-06-14 11:35 GMT

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் 4-வது வார்டில் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அதற்காக ரோட்டின் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு தளம் அமைக்காமல் ஓரத்தில் மட்டும் காங்கிரீட் சுவர் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கழிவுநீர் கால்வாய் நிர்ணயிக்கப்பட்ட தூரம் வரை பணி நடைபெறாமல் பாதியுடன் நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியாக சென்றுவர மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் இரவில் நிலை தடுமாறி வாய்க்கால் பள்ளத்தில் விழுந்து காயமடைந்துள்ளனர். அதேபோல் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்