சென்னை பாடி தெற்கு மாட வீதி இருக்கும் பகுதியில் சமீபகாலமாக குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதோடு, இந்த நீரை பயன்படுத்தவே முடியாத சூழலும் ஏற்படுகிறது. மேலும் குடிநீர் எடுப்பதற்கு எங்கள் பகுதி மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு அலைவது ஏன்? இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமா?