ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் ரேஷன் கடை முன்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியே வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வரும் இடத்தில் பெரிய பாறாங்கல் போடப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் வழிந்தோடுவதும் தடுக்கப்படுகிறது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து, அந்த பாறாங்கல்லை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.