ஏரியூர் ஒன்றியம் சுந்சல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கூர்காம்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில், அரசு பள்ளி அருகே சாலையோரம் தேங்கும் சாக்கடையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மாணவ-மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முன்பு அந்த பகுதியை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், சிகரலஅள்ளி.