கடும் துர்நாற்றம்

Update: 2023-05-14 08:15 GMT

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பழைய ஊராட்சி அலுவலக வீதியும், பிரஸ் காலனி பகுதியும் இணையும் இடத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. ஆனால் அதன் ஒருபக்க தடுப்புச்சுவர் இடிந்து, கால்வாய்க்குள் விழுந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே இடிந்து விழுந்த தடுப்புச்சுவரை அகற்றி, கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்