விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராம் லிங்கம் காலனி பள்ளப்பட்டி ரோடு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் சாலையை கடந்து செல்லும் போது மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காதவாறு செல்ல சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?