தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி முதல் அதிகாரப்பட்டி வரை சாலை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பேரூராட்சி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் நீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் இப்பணி தாமதமாக நடந்து வருவதால் கழிவு நீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.
-ராஜாராம், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.