தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பஸ் நிலையம் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் கழிப்பிட வசதி இல்லை. இதனால் பெண்களும், பொதுமக்களும், கழிப்பிட வசதி இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகளும் சிறுநீர் கழிக்க கூட எவ்வித வசதியும் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பழனிவேல், ஏரியூர், தர்மபுரி.