சென்னை புளியந்தோப்பு நாச்சாரம்மாள் லேன் தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு குடிநீரை பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.