சாக்கடை கால்வாய் இல்லை

Update: 2023-05-03 16:54 GMT

ர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கரவாண்டஅள்ளி சாலை மின்வாரிய அலுவலகம் எதிரில் பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் அங்கு பள்ளம் வெட்டி அதில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடும்போது தவறி இந்த பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

-கணேசன், கரவாண்டஅள்ளி சாலை.

மேலும் செய்திகள்