நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-07-22 12:18 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் கொளப்பாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அடையாறு ஆற்றில் கலப்பதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளால் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த பகுதியில் முறையாக மழை நீர் கால்வாய் கட்டப்படாததன் காரணமாக குடியிருப்பு வாசிகள் கடந்த பல மாதங்களாகவே மரப்பலகைகளை பயன்படுத்தி தான் வீடுகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் வாகனத்தில் செல்பவர்களும் பள்ளத்தில் விழுவது போன்ற சம்பவங்கள் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மேற்கூறிய பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்