தேங்கும் கழிவுநீர்

Update: 2022-07-22 12:16 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் சேஷாத்ரி பாளையம் பழனி தெருவில் கழிவுநீர் தேங்கி வருகிறது. தினமும் தேங்கும் கழிவுநீரால் இந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. மேலும் இந்த பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசுவதும், கொசுக்கள் படையெடுப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்