சென்னை பாடி பகுதியில் உள்ள ராஜா தெருவில் இருக்கும் சிவன் கோவிலின் பின்பக்கத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் படை எடுப்பிற்கும் வழி வகுக்கிறது. எனவே திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?