கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா ?

Update: 2023-04-30 17:56 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 10-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கழிவு நீர் கால்வாயை தூர்வாரி அதன் மேல் சிமெண்டு சிலாப்புகளளால் மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-அரவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்