தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-04-23 17:33 GMT

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது பில்பருத்தி கிராமம். இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் கழிவுநீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜா, பில்பருத்தி, தர்மபுரி.

மேலும் செய்திகள்