தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 4 ரோடு அருகே உள்ள பிள்ளையார் கோவில் எதிரே திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்பு அமைக்க வேண்டும்.
-சரவணன், மாரண்டஅள்ளி.