பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சென்னை பஸ் நிற்கும் இடத்திற்கு தெற்குப் பகுதியில் காலியாக உள்ள இடத்தினை பொதுமக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.