சென்னை பெரம்பூர் ஜமாலியா மேட்டுப்பாளையம் சந்திப்பு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை பணியானது சாலையை ஒட்டியும், வீடுகளையொட்டியும் நடைபெறுவதால் விரைந்து முடிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாநகராட்சி விரைந்து செயல்படுமா?