தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 7-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்துகளிலும் சிக்குகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சேதமடைந்த சாக்கடை கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
-அரவிந்த்அப்பு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.