சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் அண்ணா சிலை அருகில் சந்தைபேட்டையில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த பொதுகழிப்பிடம் சுத்தம் செய்யாததால் சுகாதாரமற்று காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் இநத கழிப்பிடத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.