பாதாள சாக்கடையில் அடைப்பு

Update: 2023-04-05 11:22 GMT

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பாதாள சாக்கடையில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்தாலும் மழை பெய்தால் மீண்டும் அடைப்பு ஏற்படுகிறது. தற்போது சீசன் தொடங்க இருப்பதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர உள்ளனர். இதனால் அவர்கள் அவதிப்பட நேரிடும். எனவே ஊட்டியில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்