தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே கூர்க்கம்பட்டியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவு நீரை வெளியேற்ற முறையான வசதிகளை ஏற்படுத்தவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை சீரமைத்து கழிவு நீர்முறையாக வெளியேற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-விஜயகாந்த், ஏரியூர், தர்மபுரி.