நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலைவாழ் மக்கள் செம்மேட்டில் உள்ள அரசு அலுவலகம், மருத்துவமனை ஆகியவற்றிக்கு தினமும் தங்கள் தேவைக்காக வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் செம்மேடு பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொதுகழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கழிப்பிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுகழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஜெயவேல், கொல்லிமலை, நாமக்கல்.