கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி செம்பா கவுண்டர் காலனி, அழகப்பா காலனியில் சாக்கடை கால்வாய் சரிவர தூர்வாரப்படுவது இல்லை. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வாருவதோடு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.