சென்னை ஈக்காட்டுத்தாங்கல் 100 அடி ஜவகர்லால் நேரு சாலையில் நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதோடு துர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.