கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-21 07:51 GMT

மஞ்சூரில் இருந்து கீழ்குந்தா செல்லும் சாலையில் மேல் கொட்டரக்கண்டி பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் கால்வாய் அமைந்து உள்ளது. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக மண் மூடி கிடக்கிறது. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அந்த கால்வாயை தூர்வர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்