நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி மெயின் ரோட்டில் சில நாட்களுக்கு முன்பாக கழிவுநீர் வாய்க்காலில் இருந்து திடக்கழிவுகளை அள்ளி சாலை ஓரத்தில் கொட்டி இருந்தனர். அந்த இடம் பிரதான சாலையாக இருப்பதால் அவ்வழியே சென்ற வாகனங்கள் அந்த திடக்கழிவு மீது ஏறி சென்றது. இதனால் அவ்வழியே உள்ள வீடுகளின் முன்பாக திடக்கழிவுகள் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் வாய்க்காலில் இருந்து எடுக்கப்படும் திடக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செல்வம், சேந்தமங்கலம், நாமக்கல்.