கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

Update: 2022-07-20 14:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்