சென்னை மாதவரம் புக்ராஜ் நகர் 5-வது தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் வெளியேறி வருகிறது. கடந்த 4 மாதங்களாக தொடரும் இந்த நிலையால் தெருவில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு அசுத்தமாகவும் காட்சி அளிக்கிறது. அக்கம் பக்கத்தில் குழந்தைகள் இருப்பதால் நோய் தொற்று பரவும் முன்பு கழிவு நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?