ஆனைமலைபகுதியில் உள்ள பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அங்கு கழிவுநீர் பெருமளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன. மேலும் இரவில் கொசுக்கடியும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே கொசுத்தொல்லையை கட்டுப்படுத்துவதோடு கழிவுநீர் கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.