தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டி கிராமத்தில் கழிவுநீர் வெளியேறும் கால்வாய் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், கழிவுநீர் கடந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இந்த கால்வாயை சுற்றியுள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.