தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-25 17:49 GMT

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே சித்தம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட கொண்டரசம்பாளையம் அருந்ததியர் காலனியில் இருபுறமும் கழிவுநீர் செல்லும் வகையில் தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு இடத்தில் அடைப்பு ஏற்பட்டும் பழுதடைந்தும் உள்ளதால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் செல்லும் வழியில் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சையத் அஸ்லாம்- கந்தம்பாளையம்.

மேலும் செய்திகள்