நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சி கிராமம் பழனியப்பார் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
-முருகேசன், சேந்தமங்கலம், நாமக்கல்.