நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டாலாவில் உள்ள மண்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை கொண்டு வருவர். வெளியூர்களில் இருந்து மெட்டாலா வழியாக கொல்லிமலைக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பயணிகள், மாணவர்கள், வியாபாரிகள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அங்கு வருபவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே நவீன வசதியுடன் கழிப்பறை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சேவகன், ராசிபுரம், நாமக்கல்.