நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் கழிவுநீர் வாய்க்காலில் அப்பகுதியில் சென்று வருவோர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரேசன், சேந்தமங்கலம், நாமக்கல்.