நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பாலப்பட்டியில் இருந்து எஸ்.வாழவந்தி செல்லும் சாலையில் கீழ் பாலப்பட்டியில் குறுகலான சாலையில் சாக்கடை செல்கின்றது. மின் கம்பத்தைெயாட்டி சாக்கடை கால்வாய் மூடப்படாமல் உள்ளது. மேலும் அந்த பகுதியில் ஒரு சிறிய வளைவு உள்ளதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபுமணி, பாலப்பட்டி, நாமக்கல்.