நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் 4-வது வார்டு வெட்டுகாடு பகுதியில் உள்ள சாலைகளில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சதாசிவம், வெண்ணந்தூர், நாமக்கல்.