கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா?

Update: 2022-12-18 17:08 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோட்டில் இருந்து பஸ் நிலையம் செல்லும் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திறந்த வெளியில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டுவதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலப்புகள் அமைத்து மூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாய் முரளி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்