தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கழிப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது வரை இந்த கழிப்பறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கதிர், பாலக்கோடு, தர்மபுரி.