தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி மருத்துவ சிகிச்சை வரும் நோயாளிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் பரவும் நிலை உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.சிலம்பரசன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.