கூடலூர் வ.உ.சி. நகரில் பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் பல வாரங்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் நடந்து செல்லும் போது பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீர் சீராக வழிந்தோட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.